Tuesday, November 9, 2010

அன்பே ஆருயிரே

உன்னோடு நான் வாழ்ந்த ஓவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வில் மறவாது
கண்மணியே!
நேரமும், காலமும் கடந்துவிட்டது,
இருவரின் இருபது விரலும் கரம்பிடித்து,
நான்விழிகளும் சிறகடித்து,
கன்னங்கள் சிவக்க,
எண்ணங்கள் மலர,
உன்னை கரம் பிடித்தேனடி,
என் அன்பே ஆருயிரே!

கல்யாண தேனிலா

கண் என நீ இருந்தால்,
இமை பொழுதில் நான் இருப்பேன்,
காற்று என நீ இருந்தால்,
தூசியாய் உன்னை வருடிச் செல்வேன்,
கலங்காத நீர் ஓடையில்,
கலங்கிய நீராய் நீ இருக்க,
என்னை கலங்கடித்த செல்வமே,
உன்னை என் வசம் ஆக்கும்
திருநாள்,
நம் வாழ்வில் "மணநாள்"
அன்பே என் ஆருயிரே!

Monday, November 8, 2010

Mind vs Heart

Love is an art of decorating Heart,
Without the help of Mind

Friday, July 16, 2010

எனக்காக

கண்ணா பின்னா என்று எழுதிய கவிதைகள்,
ஒன்று கூட புலப்படவில்லை,
எனக்கு என்று தேடும் போது!

Wednesday, July 7, 2010

ஈழம்

வந்தாரை வாழ வைத்தவன் தமிழன்,
பாவம்!இங்கே அவனே வாழ வழியின்றி கிடக்கிறான்!
முத்தம் தரும் உதடுகளோ,
கிழிந்து கிடக்கிறது!
அன்னை மடியோ,
வெடித்து கிடக்கிறது!
பிறக்கும் சிசுவுக்கும் அவசரம் தான்,
ஏனோ! பிறந்தவுடன் இறந்துவிடுகிறது!
இங்கே இருக்கைக்கு சண்டை,
அங்கே இருக்கவே சண்டை!
பொருள் பொதிந்த தமிழ் அகராதியிலும்,
தமிழனுக்குப் பொருள் 'அகதி'...

Friday, July 2, 2010

விருப்பங்களும்-திருப்பங்களும்

வாழ்க்கையில் விருப்பங்களும் திருப்பங்கள் நிறைந்தது தான்,
திருப்பங்கள் விருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீராய் போகும்...
விருப்பங்கள் திருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீருகெட்டுப் போகும்...

Sunday, June 27, 2010

உன்னிடம்

தோற்பது கூட
சுகம் தான்,
வீழ்வது உன் மடியாக
இருந்தால்..!

அழாமல் சிரிக்கிறேன்

அழுக வேண்டுமென்றால்
அழுதுவிடுகிறேன்,
சிரிக்கும்போதெல்லாம்...

தோழா

கனவுகளும் நொறுங்கியது,
கற்பனைகளும் சிதைந்தது,
ஏனோ,
என் நினைவுகள் மட்டும்,
உங்களைச் சுற்றியே..!

உயிர்மெய்

உயிர்மெய் எழுத்துக்களை
நீ அறிந்திருந்தால்,
உயிரும் உன் அருகில்,
மெய்யும் உன் அருகில்,
உயிராய் நீயும்,
மெய்யாய் நானும்...


                                                        
நிரு...

Wednesday, June 16, 2010

God


It is hard to hear that,
God is created in stones, and
'It is even harder to hear that,
Those stones created us'...

Tuesday, June 15, 2010

"பருத்தி சேலை"


கஞ்சி படுத்தும் பாடு,
ஏழைகளை மட்டுமல்ல,
சேலைகளையும் தான்...

இறுதி ஊர்வலம்



மேலதாளங்களும், தாரை தப்பட்டைகளும்,
யாருக்காக அடிகிறார்களோ,
அவர்கள் காதுக்கே எழவில்லை...
-நிரு

நானும் எழுதுவேன் குறள்...

தோல்வி எனப் படுவது யாதெனில்
அஃதே வெற்றிக்குத் துணை

-நிரு

Monday, June 14, 2010

விரும்பி எழுதிய கவிதை

விரும்பி எழுதிய கவிதை ஒன்று,
வாசித்து காண்பித்தேன் அன்னையிடம் அடுபங்கரையில்,
அன்னையிடம் இருந்து வந்த முதல் வார்த்தை,
எங்கே நான் வாங்கி வரச் சொன்ன கருவேப்பிலை என்று...

நிரு...

About Me: Niru


Hello,
I'm niruphan chakravarthy. My passion is all about writing poems. Started to write poems during my 9th standard, and continued forever. My first poem was

"காலம் பொன் போன்றது
கவிதை பெண் போன்றது"... -niru

Wrote many poems then, still now i couldn't recognize how i started to write poems. No inspirations, nothing but i had a passion for Tamil. Here i gonna display my everlasting poems just to share with you.
என்றும் அன்புடன்,
நிரு...