வந்தாரை வாழ வைத்தவன் தமிழன்,
பாவம்!இங்கே அவனே வாழ வழியின்றி கிடக்கிறான்!
முத்தம் தரும் உதடுகளோ,
கிழிந்து கிடக்கிறது!
அன்னை மடியோ,
வெடித்து கிடக்கிறது!
பிறக்கும் சிசுவுக்கும் அவசரம் தான்,
ஏனோ! பிறந்தவுடன் இறந்துவிடுகிறது!
இங்கே இருக்கைக்கு சண்டை,
அங்கே இருக்கவே சண்டை!
பொருள் பொதிந்த தமிழ் அகராதியிலும்,
தமிழனுக்குப் பொருள் 'அகதி'...

இங்கே இருக்கைக்கு சண்டை,
ReplyDeleteஅங்கே இருக்கவே சண்டை!
-- நல்ல வரிகள். S. Prakash
பொருள் பொதிந்த தமிழ் அகராதியிலும்,
ReplyDeleteதமிழனுக்குப் பொருள் 'அகதி'...
அற்புதம் சிந்திக்கதக்க்வை..